ஆப்பிரிக்காவில் வடிவேலு- கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வடிவேலு?
வைகைப்புயலுடன் நிறைய படங்களில் பணியாற்றிய ரவிக்குமாரும் இந்த புதிய வாய்ப்பு பற்றி நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்து பற்றி புத்தகம் எழுதிய டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த் தன்னிடம் ஒரு கதையை கூறியதகாவும், வடிவேலுவிடமே இதுபற்றி அவர் பேசியுள்ளதாகவும் தெரிகிறது.
இந்த கதை தனக்கு பிடித்திருப்பதாகக் கூறியுள்ள ரவிக்குமார். இந்த படம் பிரம்மாண்டமான தயாரிப்பாகவே இருக்கும் என்பதால் அதற்குத் தகுந்த தயாரிப்பாளர் தேவை.
இன்னும் இந்தப் புதிய படம் குறித்த விவகாரம் ஆரம்பக்கட்டத்திலேயே உள்ளது. இது ஒரு பிரம்மாண்டத் தயாரிப்பு என்பதால் இதுபற்றி இப்போதைக்கு எதுவும் உறுதியாக கூறிவிட முடியாது என்று கூறியுள்ளார் ரவிக்குமார்.
பவர் ஸ்டார், சந்தானம் என்று போய்க்கொண்டிருக்கும் இண்டஸ்ட்ரியில் வடிவேலுவை வைத்து ரிஸ்க் எட்க்க தயாரிப்பாளர் யாராவது தயாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
No comments:
Post a Comment